Thursday, November 4, 2010

தீபாவளி




"இன்று விடுமுறை இந்தியாவில் தீபாவளி"
அருகில் இருந்த
அமெரிக்கனிடம் சொன்னேன்,

"என்ன" என கேள்விக்கு புன்னகைகையில்
மனம் ஒருமுறை
இந்தியா(india) சென்றது!

தீபாவளி!!!


டம் டம் டமார் பாட்டாசு!
சுகமாய் எண்ணெய் குளியல்.

கடை திரளும் மக்கள் கூட்டம்,
சல சலக்கும் புது புது உடைகள்!



வடை பாயசம் முறுக்கு லேகியம்,
விருந்து சாப்பாடு விருந்தினர் வருகை!

வீடு நிறைய - பேச்சு கலகலப்பு,
டம் டம் டமார் வெடி சத்தம்!



இன்டர்நெட் சொடுக்கினால் ,
அயல்நாட்டவனுக்கு தெரியும்...
தீபாவளி "festival " உம்
'fireworks " - பட்டாசும்!!


புன்னகைத்த என்-மனதிற்கு
தான் புறியும்

பார்த்து மகிழ்ந்த
உறவும்
உணர்வும் !

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Friday, October 1, 2010

வெள்ளிக்கிழமை

அன்று


விடியலில் மஸ் சுப்ரபாதம்
வீடுபரவும் பக்தி மனம்

குளித்த ஈரம்கலையா தலைகள்
பாட்டியின் அடுப்பில் பரபர சமையல்


வெள்ளிக்கிழமை!




இன்று


விடிந்தும் போர்வைகுள்ஒளிந்து தூக்கம்
அமைதியாய் ஓய்வில் அடுப்பறை




எல்லார் முகத்திலும் எக்ஸ்ட்ரா புன்னகை
துள்ளலாய் மனதில் பாடல்

Happy Friday :-)!

Monday, August 23, 2010

குட்டியம்மா


வீட்டுனுள் நுழைந்தேன் (அலுவல்)இன்னல்கள் விட்டு,
விலகாமல் நீண்டது மீதமாய் தலைவலி!




மழலை பேசி துள்ளலாய் வந்தாய் !
என் முகம்பார்த்து ஓர்நொடி அமைதியாய் நின்றாய் !
குட்டி கரங்களால் மெல்ல வருடினாய்
உன் மடி கொடுத்து தட்டி தூங்க செய்தாய்!




உனக்கு தெரிந்த டாக்டர் பொம்மைகளில்,
எல்லாவற்றிலும் காய்ச்சல் பார்த்தாய்.!
என்னடா செய்கிறாய்
"குட்டியம்மா"
என்றேன்
--இல்லை இல்லை நீதான் அம்மா என்றாய்.



கோவிலுக்கு தினம் தோறும்
போகாத காரணத்தால்
கடவுள் யோசித்து அனுப்பினாரா?
தெய்வமாய் ஒரு குழந்தை!


என்னிடம் எதை நீதான்
கற்றாயோ தெரியவில்லை?
தினம்தோறும் உலகை உன்னோடு
புதிதாய் நான் பார்க்கின்றேன்!

Saturday, August 21, 2010

??????

பேச தெரியாத
மௌனம்!

பேசி தெளியாத
மனம்!

நாளை என்னவென்று
? (கேள்வி)


வார்த்தை முடிவுறாது
கவிதை!

Thursday, July 1, 2010

சிணுங்கல்கள் :-)



மடியினில் விழுந்ததும்
சிணுங்கினேன் நான் !


பற்றி அணைத்து
கன்னம் உரசினாய் நீ !

(அட இது காதல் இல்லீங்க !!1)




சிரித்து மயங்கி
இரவெல்லாம் பேசினாய் நீ!


விழித்திருந்து உன்அருகே
எப்போதும் நான் !

(ஆஹா ! சொன்ன நம்புங்க)




காலையில் கண்விழிக்கையில்
பதறி போனாய் நீ!

உன்னருகே உயிரற்று
கிடந்தேன் நான் !


----இதுக்குமேல உயிரோடிருக்க சார்ஜ் இல்லங்க :-)
---அட நான் செல்போன் னுங்க.


Monday, June 21, 2010

கிளிஞ்சல்கள்!


கண் விரித்து
அலை பார்த்த
குட்டி பாப்பா!

நீச்சல் கற்க
நீருக்குள் மூழ்கும்
வால் பையன்!


கை கோர்த்து
தலை சாய்த்த
மயக்கத்தில் காதலி!


தொலைந்த மனதை
நடுவானில் தேடிய
காதல் இளைஞன்!


நண்பர்கள் சூழ
வாழ்கையை வாழ வந்த
கல்லூரி இளைஞன்

கதை எழுத
இடம்தேடி அமர்ந்த
அன்பு எழுத்தாளர்!

கரை தொட்டு
கடல் சேரும்
ஓயாத அலைகள்!

மணல் மேலே
தினம் சேரும்
ஆயிரம்
கிளிஞ்சல்கள்!

Sunday, June 20, 2010

கனவு




கருவான மேகம்
கனமான மனம்




இதமான தூறல்


இமைமூடாத ஒரு தேடல்


















---




சலசல தொடர் மழை


சலனமில்லா ஆழத்தில் சிந்தனை


















---




விடியலில் - வெளிச்சமாய் வானம்


விடிந்தும் விடாது விட்டு போன கனவு !

Friday, May 28, 2010

உனக்காக

என்றைக்கும் போல பர பர குளியல் சமையல்

முகம் பார்த்து பேசும் முன் ஓடிவிட்ட காலை பொழுது

கடிகார மணி பார்த்து அவசர அவசர ஆபீஸ் வேலைகள்

இத்தனைக்கும் நடுவே நடுவே எட்டி பார்க்கும்

உன் நினைவு !

இன்றைக்காவது அனுப்ப , தேடினேன் அழகு கவிதைகள்

புகைப்படம் , வாழ்த்து அட்டை, பரிசு பொருள்

ஒன்றும் அகப்படவில்லை உன்னை சிரிக்க வைக்க!

இன்னும் கொஞ்சம் தேடுவதற்குள்

அவசரமாய் அடுத்த மீட்டிங்

இப்போதைக்கு நான் அனுப்புவது என் குட்டி புன்னகை மட்டுமே ,

உன் நினைவுகளால் !

மலரும் நினைவுகள




ஊருக்குள் தினமும் தான் நடக்கின்றன
திருமணங்கள் !

ஊர் பார்த்து உறவு கூடி
பெண் பார்த்து முகம் பாராமல்
நிச்சயித்து பின் மனம் கலந்து
பேசி அமைந்ததால் -
சில திருமணங்கள்!

ஊர் சுற்றி உறவு தெரியாமல்
கதைகள் பேசி மனம் கலந்து
உயிராய் உயிரென காதலித்து
சிறிதாய் பெரிதாய் கஷ்டப்பட்டு
பேசி அமைதததால் -
சில திருமணங்கள்

எப்போதும் இருக்கின்றனர்
ராஜகுமாரனுக்காக கனவுகளில் காத்து இருக்கும்
முதிர் கண்ணிகள் !

தினமும் ஒருவராவது பார்க்க முடியும் -
அந்த அழகு தேவதைக்காக காத்து இருக்கும்
நாளைய மாப்பிள்ளைகள் !


நாட்கள் கடந்து,
வருடங்கள் ஓடி,
சுற்றம் நட்பு என ஒன்றாய் கூடுகையில்
ஓவருவருக்கும் பேச இருக்கிறது
பல வசந்த கால கதைகள்:-)
அனைவருக்கும் பொதுவாய் இருக்கிறது
அவரவர் கடந்து வந்த
மலரும் நினைவுகள் :-)))


Note:
(தேடி அலைந்து, அழுது மறைந்த காதல்கள் எல்லாம்
இந்த கதைகளில் பேசுவதில்லை -----------------
அதனால், அவற்ற்றை இங்கே எழுதவில்லை :-))