Monday, July 7, 2014

???

இன்றைக்கும் சொல்ல
சேதி  ஒன்றும்  இல்லை

மௌனத்தில் மூழ்க ஏனோ
மனம் பழக வில்லை

கண்ணுக்குள் பார்த்தாலும் சில
கலக்கங்கள் தெரிவது இல்லை

வாரத்தைகள் சேர்த்தாலும்  சில
கவிதைகள் முடிவதே இல்லை!

Friday, October 21, 2011

அடுத்த ஞாயிறு!



யோசித்து குறிப்புதேடி
குழம்பு வைக்க !

தொலைபேசியில் உறவுடன்
கதைகள் பேச!


நகப்பூச்சு மறையும்முன்
கலர் மாற்ற!

சோபாவில் ஹாயாய்
மதியம் தூங்க!

மாலையில் கடற்கரையில்
காற்றாட நடக்க!

கிறுக்கலாய் கொஞ்சமேனும்
கவிதை எழுத! (:-))

பட்டியல் இடுகை
கொஞ்சம் நீளமாக!


காலெண்டரில் தேடினேன்
அடுத்த ஞாயிறு!

Thursday, November 4, 2010

தீபாவளி




"இன்று விடுமுறை இந்தியாவில் தீபாவளி"
அருகில் இருந்த
அமெரிக்கனிடம் சொன்னேன்,

"என்ன" என கேள்விக்கு புன்னகைகையில்
மனம் ஒருமுறை
இந்தியா(india) சென்றது!

தீபாவளி!!!


டம் டம் டமார் பாட்டாசு!
சுகமாய் எண்ணெய் குளியல்.

கடை திரளும் மக்கள் கூட்டம்,
சல சலக்கும் புது புது உடைகள்!



வடை பாயசம் முறுக்கு லேகியம்,
விருந்து சாப்பாடு விருந்தினர் வருகை!

வீடு நிறைய - பேச்சு கலகலப்பு,
டம் டம் டமார் வெடி சத்தம்!



இன்டர்நெட் சொடுக்கினால் ,
அயல்நாட்டவனுக்கு தெரியும்...
தீபாவளி "festival " உம்
'fireworks " - பட்டாசும்!!


புன்னகைத்த என்-மனதிற்கு
தான் புறியும்

பார்த்து மகிழ்ந்த
உறவும்
உணர்வும் !

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Friday, October 1, 2010

வெள்ளிக்கிழமை

அன்று


விடியலில் மஸ் சுப்ரபாதம்
வீடுபரவும் பக்தி மனம்

குளித்த ஈரம்கலையா தலைகள்
பாட்டியின் அடுப்பில் பரபர சமையல்


வெள்ளிக்கிழமை!




இன்று


விடிந்தும் போர்வைகுள்ஒளிந்து தூக்கம்
அமைதியாய் ஓய்வில் அடுப்பறை




எல்லார் முகத்திலும் எக்ஸ்ட்ரா புன்னகை
துள்ளலாய் மனதில் பாடல்

Happy Friday :-)!

Monday, August 23, 2010

குட்டியம்மா


வீட்டுனுள் நுழைந்தேன் (அலுவல்)இன்னல்கள் விட்டு,
விலகாமல் நீண்டது மீதமாய் தலைவலி!




மழலை பேசி துள்ளலாய் வந்தாய் !
என் முகம்பார்த்து ஓர்நொடி அமைதியாய் நின்றாய் !
குட்டி கரங்களால் மெல்ல வருடினாய்
உன் மடி கொடுத்து தட்டி தூங்க செய்தாய்!




உனக்கு தெரிந்த டாக்டர் பொம்மைகளில்,
எல்லாவற்றிலும் காய்ச்சல் பார்த்தாய்.!
என்னடா செய்கிறாய்
"குட்டியம்மா"
என்றேன்
--இல்லை இல்லை நீதான் அம்மா என்றாய்.



கோவிலுக்கு தினம் தோறும்
போகாத காரணத்தால்
கடவுள் யோசித்து அனுப்பினாரா?
தெய்வமாய் ஒரு குழந்தை!


என்னிடம் எதை நீதான்
கற்றாயோ தெரியவில்லை?
தினம்தோறும் உலகை உன்னோடு
புதிதாய் நான் பார்க்கின்றேன்!

Saturday, August 21, 2010

??????

பேச தெரியாத
மௌனம்!

பேசி தெளியாத
மனம்!

நாளை என்னவென்று
? (கேள்வி)


வார்த்தை முடிவுறாது
கவிதை!

Thursday, July 1, 2010

சிணுங்கல்கள் :-)



மடியினில் விழுந்ததும்
சிணுங்கினேன் நான் !


பற்றி அணைத்து
கன்னம் உரசினாய் நீ !

(அட இது காதல் இல்லீங்க !!1)




சிரித்து மயங்கி
இரவெல்லாம் பேசினாய் நீ!


விழித்திருந்து உன்அருகே
எப்போதும் நான் !

(ஆஹா ! சொன்ன நம்புங்க)




காலையில் கண்விழிக்கையில்
பதறி போனாய் நீ!

உன்னருகே உயிரற்று
கிடந்தேன் நான் !


----இதுக்குமேல உயிரோடிருக்க சார்ஜ் இல்லங்க :-)
---அட நான் செல்போன் னுங்க.