
வீட்டுனுள் நுழைந்தேன் (அலுவல்)இன்னல்கள் விட்டு,
விலகாமல் நீண்டது மீதமாய் தலைவலி!

மழலை பேசி துள்ளலாய் வந்தாய் !
என் முகம்பார்த்து ஓர்நொடி அமைதியாய் நின்றாய் !
குட்டி கரங்களால் மெல்ல வருடினாய்
உன் மடி கொடுத்து தட்டி தூங்க செய்தாய்!

உனக்கு தெரிந்த டாக்டர் பொம்மைகளில்,
எல்லாவற்றிலும் காய்ச்சல் பார்த்தாய்.!
என்னடா செய்கிறாய்
"குட்டியம்மா"
என்றேன்
--இல்லை இல்லை நீதான் அம்மா என்றாய்.
கோவிலுக்கு தினம் தோறும்
போகாத காரணத்தால்
கடவுள் யோசித்து அனுப்பினாரா?
தெய்வமாய் ஒரு குழந்தை!
என்னிடம் எதை நீதான்
கற்றாயோ தெரியவில்லை?
தினம்தோறும் உலகை உன்னோடு
புதிதாய் நான் பார்க்கின்றேன்!
